"நதிகள் மீட்போம்" இயக்கத்திற்கு தமிழக அரசின் முழு ஆதரவு உண்டு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

"நதிகளை மீட்போம்" பிரச்சாரக் குழுவினருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு - நதிகளை மீட்கும் பேரணிக்கு விவசாய சங்கத்தலைவர்கள் ஒருமித்த ஆதரவு அழிந்து வரும் நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய "நதிகளை மீட்போம்" என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகியுள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 30 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பேரணியில், சத்குரு நாடு முழுவதும் தாமே சுமார் 7,000 கி.மீ. தூரம் வாகனம் ஓட்டிசெல்கிறார். அவரோடு, வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இந்த பயணம் அக்டோபர் 2ம் தேதி தில்லியில் முடிவடைகிறது. இந்த விழிப்புணர்வு பேரணி 16 மாநிலங்களின் வழியாக செல்லும். 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், 16 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் கோவை, மதுரை, கன்னியாகுமாரி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி மற்றும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

இந்த நிலையில், கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய "நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பயணம் மதுரை, குமரி, திருவனந்தபுரம், திருச்சி, புதுவை, கோபி, மைசூரு மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களை கடந்து நேற்று (10,09,2017) சென்னையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.



நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பேரணிக் கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைசச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, நடிகை .சுஹாசினி மணிரத்தினம், நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில், பிரபல பாடகர்கள் உஷாஉதுப் மற்றும் கார்த்திக் ஆகியோரின் கோலாகலமான இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், இந்த பேரணியில் சென்னையுடன், தான் தமிழகத்திலிருந்து வெளியேறுவதால், தான் தில்லி செல்லும் வரை அனைவரிடமும் இந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இவரைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், நீர் வளங்களைக் காக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டதோடு, தமிழக அரசின் முழு ஆதரவும் இந்த நதிகள் மீட்பு இயக்கத்திற்கு உண்டு என்றார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...